செய்திகள்

ஒரே தேதியில் வெளியான நடிகர் கார்த்தியின் 3 படங்கள்

நடிகர் கார்த்தியின் 3 படங்கள் ஒரே தேதியில் வெளியாகியுள்ளது. 

DIN

'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் வேடத்தில் நடித்துள்ளார். அவரது தோற்றப் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. 

நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள 'விருமன்' படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். 'கொம்பன்' படத்துக்கு பிறகு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. 

தற்போது 'சர்தார்' படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'இரும்புத்திரை', 'ஹீரோ' படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுளளார். 

இந்த நிலையில் கார்த்தியின் 'பையா', 'கொம்பன்', 'சுல்தான்' படங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகியிருந்தன. 'பையா' படம் வெளியாகி 12 ஆண்டுகளையும், கொம்பன் வெளியாகி 7 ஆண்டுகளையும், சுல்தான் வெளியாகி 1 ஆண்டுமாகிறது. 

இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பையா திரைப்படம் எனக்கு ஒட்டுமொத்தமாக புதிய தோற்றத்தைக் கொடுத்தது. கொம்பன் படம் என்னை மீண்டும் கிராமத்துக்கு அழைத்து சென்றது.

சுல்தான் படம் என்னை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தியது. இந்தப் படங்கள் அனைத்தும் ஒரே நாளில் வெளியானது. என்னுடைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT