செய்திகள்

'இதனால்தான் நாங்க பிரிஞ்சுட்டோம்': கவின் குறித்து மனம் திறந்த லாஸ்லியா

கவினுடனான பிரிவு குறித்து பேட்டி ஒன்றில் லாஸ்லியா தெரிவித்துள்ளார். 

DIN

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்ட கவினும் லாஸ்லியாவும் நெருக்கமாக பழகி வந்தனர். விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் அப்பா அவரைக் கண்டித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. மேலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் பேசுவதை தவிர்த்துவந்தனர். இந்த நிலையில் அஸ்வினுடன் பாடல் ஒன்றுக்கு லாஸ்லியா நடனமாடியுள்ளார். 

இதுதொடர்பாக லாஸ்லியா அளித்த பேட்டியில் கவின் குறித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ''நாங்கள் இருவரும் உறவில் இருந்தோம். ஆனால் எங்களுக்குள் ஒத்துவரவில்லை. வீட்டுக்குள் இருக்கும்போது பிடித்திருந்தது. ஆனால் வெளியில் வந்து பார்க்கும்போது வேறுமாதிரி இருந்தது. நாங்கள் பிரிந்துவிட்டோம்'' என்றார்.   

கவின் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'ஊர் குருவி' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் லாஸ்லியா கே.எஸ்.ரவிக்குமாரின் 'கூகுள் குட்டப்பன்' படத்தில் பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் இருவரது படங்களும் வெளியாகவிருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் ஆம் ஆத்மி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பலே ரோஜா... மாளவிகா மோகனன்!

SCROLL FOR NEXT