மீண்டும் இணையும் சூர்யா-சுதா கொங்கரா கூட்டணி!
சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து மீண்டும் படம் இயக்குவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து மீண்டும் படம் இயக்குவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, மோகன் பாபு, ஊர்வசி, அபர்னா பாலமுரளி, கருணாஸ் காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் 2020 நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.
இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பையும் பல்வேறு விருதுகளையும் பெற்றது. குறிப்பாக ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது.
Advertisement
அப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சூர்யா ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். தற்போது, இயக்குநர் பாலா படத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில், ஹிந்தியில் சூரரைப் போற்று படத்தை இயக்கி வரும் இயக்குநர் சுதா கொங்கரா மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து திரைப்படம் இயக்குவதாக தெரிவித்துள்ளார்.