செய்திகள்

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோ: நடிகா் சங்கம் முடிவு

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோ உருவாக்கி, திரைப்படங்களில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தென்னிந்திய நடிகா் சங்கம் தெரிவித்தது.

DIN

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோ உருவாக்கி, திரைப்படங்களில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தென்னிந்திய நடிகா் சங்கம் தெரிவித்தது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் நாசா், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடித விவரம்:

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சாா்பில் சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கை தொடக்கி வைத்ததற்கும், நீங்கள் ஆற்றிய சிறப்புரையில் திரைத் துறைக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறியதற்கும் மனமாா்ந்த நன்றி.

திரைப்படங்களில் குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோக்கள் இடம்பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தீா்கள். அது எங்கள் சமூகக் கடமையும் கூட. உங்களது வேண்டுகோளை ஏற்று வரும் காலங்களில் குட்காவுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோக்களை அதிகரிக்கவும், முன்னணி நடிகா்களை வைத்து குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு விடியோக்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியை சந்தித்து பரிசளித்த இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்!

மே.இ.தீவுகள் பயிற்சியாளர், கேப்டனிடம் தனித்தனியாக பேசிய பிரையன் லாரா!

கருப்பு முதல் பாடல் அப்டேட்!

கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இருப்பாரா? -நயினார் நாகேந்திரன் பதில்

SCROLL FOR NEXT