செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DIN

தனுஷ் உடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய பயணி என்ற பாடல் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை பகிர்ந்த தனுஷ், ''தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்'' என்று பதிவிட, அதற்கு ஐஸ்வர்யா நன்றி தெரிவித்திருந்தார். 

ஐஸ்வர்யா அடுத்ததாக ஹிந்தியில் காதல் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதற்காக முன் கட்ட தயாரிப்பு பணிகளில் தற்போது ஐஸ்வர்யா ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்துக்கு 'ஓ சாதி சால்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தையும் ஐஸ்வர்யா இயக்கவிருக்கிறார். 

இந்த நிலையில் இளையராஜாவுடன் இருக்கும் படத்தை ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது பதிவில், ''எனது திங்கள் கிழமை மதியம் இசையுடன் கழிந்தது. என் அன்புள்ள இளையாராஜாவுடன் நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் 'வொர்க் மோட் ஆன்' என்று குறிப்பிட்டுள்ளதால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. 

முன்னதாக இளையராஜாவின் 'ராக் வித் ராஜா' இசை நிகழ்ச்சியில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் கலந்துகொண்டார். மேடையில் தனது மகன்களுக்காக நிலா அது வானத்து மேலே பாடலை தாலாட்டு பாடலாக மாற்றி தனுஷ் பாடியது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT