செய்திகள்

அமிதாப் பேரன், ஸ்ரீதேவியின் மகள் நடிக்கும் இணையத் தொடரை இயக்கும் ஆர்யன் கான்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இணையத் தொடர் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியே வந்திருக்கும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், ஐபிஎல் அணி வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுவந்தார். 

இந்த நிலையில் அடுத்தகட்டமாக இணையத் தொடர் ஒன்றை இயக்கும் முயற்சிகளில் ஆர்யன் கான் ஈடுபட்டுவருகிறாராம். இதற்காக முன்கட்ட தயாரிப்பு பணிகளில் அவர் தற்போது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த இணையத் தொடரில் ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தா நந்தா, நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது இந்த இணையத் தொடரில் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிவார்கள் என்று தெரிகிறது. தொடருக்கு பிறகு திரைப்படம் ஒன்றையும் ஆர்யன் கான் இயக்கவிருக்கிறாராம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயா்வு

ரூ.5,000 கோடி திரட்டும் ஆக்ஸிஸ் வங்கி

காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறாா் விஜய்!

டெஃப்லிம்பிக்ஸ்: மஹித் சாந்துவுக்கு 4-ஆவது பதக்கம்

திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பு: இதுவரை 100 தொகுதிகளை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT