முகப்பு
செய்திகள்

கோலாகலமாக நடைபெறும் ரன்பீர் - ஆலியா திருமணம்: சுவாரசியத் தகவல்கள்

ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் குறித்த சுவாரசியத் தகவல்கள இதோ

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

நடிகர்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் இன்று(ஏப்ரல் 14) மும்பையில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் சூழ எளிமையாக நடைபெறவிருக்கிறது. தற்போது அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

கடந்த இரண்டு நாட்களாக திருமணத்துக்கு முந்தைய சடங்களுக்குள் நடந்தன. இந்த நிலையில் திருமணத்தில் கரீனா கபூர், கரிஸ்மா கபூர். கரண் ஜோகர், ஜோயா அக்தர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதற்காக ஆலியா பட்டின் வீடு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

ரன்பீர் - ஆலியாவின் திருமணம் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. நடிகர் அமிதாப் பச்சன் தனது வாழ்த்து செய்தியை இருவருக்கும் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →