செய்திகள்

இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் நாக சைதன்யா

நாக சைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா - நாக சைதன்யா ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

தற்போது இருவரும் வேறு வேறு படங்களில் நடித்து வருகின்றனர். 'ஓ பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி அடுத்ததாக இயக்கும் படத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோரை நடிக்கவைக்க முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகும் இந்தப் படத்தி் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் நாக சைதன்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறாராம். இதற்காக நாக சைதன்யா வீட்டில் அவருக்கு தீவிரமாக பெண் தேடி வருகின்றனராம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT