செய்திகள்

'என்னது! கண்தத்தாவா?' குழந்தை மொழியில் தனது மகள் பேசும் விடியோவை பகிர்ந்த சதீஷ்

DIN

நகைச்சுவை நடிகரான சதிஷ் 'நாய் சேகர்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது 'சட்டம் என் கையில்' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'சிக்சர்' படத்தை இயக்கிய சாச்சி இயக்கிவருகிறார். 'சட்டம் என் கையில்' பட முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

இந்த நிலையில் தன் மகளுடன் உரையாடும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது மகளுக்கு 'கண்டிப்பா' என்று சொல்லிக்கொடுக்க, அவரது மகள் 'கண்தத்தா' என பதிலளிக்கிறார். அப்போது 'நான் சொல்லிக்கொடுப்பதை சொல்லக்கூடாது அதானா ?'  என சதிஷ் கேட்க, 'அதான்' என குழந்தை மொழியில் அவரது மகள் பதிலளிக்கிறார். இந்த விடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT