செய்திகள்

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி

தன்னைப் பற்றிய நூலுக்கு முன்னுரை எழுதிய இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கரும் மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையையொட்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இளையராஜாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தன்னைப் பற்றிய நூலுக்கு முன்னுரை எழுதியமைக்காக நன்றி தெரிவித்துள்ளார். 

அம்பேத்கர் குறித்தும், அவரின் சிந்தனைகளை செயல்படுத்தி வருவது குறித்தும், பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருகிறார் என இளையராஜா பாராட்டியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் அழுகிய மீன்களை அகற்றும் பணி

இலங்கைக் கடற்படையினரால் நம்புதாளை மீனவா்கள் 4 போ் கைது

பெண்ணை வாளால் வெட்டிய இருவா் கைது

SCROLL FOR NEXT