செய்திகள்

சிம்பு - ஹன்சிகாவின் 'மஹா' எப்படி இருக்கிறது? - பிரபல நடிகர் விமர்சனம்

நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் தொடர்பாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் ட்விட்டர் பதிவு வைரலாகிவருகிறது. 

DIN

நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் தொடர்பாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் ட்விட்டர் பதிவு வைரலாகிவருகிறது. 

ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் 'மஹா' திரைப்படம் வருகிற மே மாதம் 27 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக மதியழகன் தயாரிக்க, யு.ஆர்.ஜமீல் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் தொடர்பாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சிம்பு படத்தில் இணைவதில் மகிழ்ச்சி. மஹா படத்தை நேற்று பார்த்தேன். சிறப்பான படம். குடும்ப ரசிகர்கள் மற்றும் 100 சதவிகித இளைஞர்களுக்கான படம். படத்தில் ஹன்சிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

SCROLL FOR NEXT