செய்திகள்

திடீரென சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்த விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

DIN

நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் விஷ்ணு விஷால். தற்போது கட்ட குஸ்தி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் தெலுங்கில் மட்டி குஸ்தி என்ற பெயரில் உருவாகிறது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா தனது ஆர்டி டீம் வொர்க்ஸ் சார்பாக தயாரிக்கிறார். 

இந்தப் படத்தை செல்ல அய்யாவு இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் விடியோ போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தான் சமூக வலைதளங்களிலிரு்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில், ''வாழ்க்கையில் அவ்வப்போது இடைவேளை எடுத்துக்கொள்வது முக்கியம். சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT