செய்திகள்

நடிகர் சக்கரவர்த்தி மரணம் - பிரபலங்கள் இரங்கல்

DIN

1980களில் பிரபலமாக இருந்த பிரபல நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். 

தமிழ் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சக்ரவர்த்தி. அவர் இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 62. 

கடந்த 1970 மற்றும் 80களில் ஏராளமான தமிழ் படங்களில் சக்ரவர்த்தி நடித்துள்ளார். இதுவரை 80 திரைப்படங்களல் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

சினிமாவிலிருந்து விலகிய சக்கரவர்த்தி மும்பையில் குடும்பத்துடன் வசித்துவந்தார். தனியார் தொலைக்காட்சியில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராக அவர் இருந்துவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சக்கரவர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

பிரான்ஸில் சோபிதா துலிபாலா..

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

SCROLL FOR NEXT