செய்திகள்

ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு இந்தியா வந்த நடிகர் வில் ஸ்மித்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

நடிகர் வில் ஸ்மித் மும்பைக்கு வந்தபோது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

DIN

நடிகர் வில் ஸ்மித் மும்பைக்கு வந்தபோது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ஆங்கில நடிகர் வில் ஸ்மித் 'கிங் ரிச்சர்டு' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவியைக் கிண்டலடித்த தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது செயலுக்காக நடிகர் வில் ஸ்மித் மன்னிப்புக்கோரினார்.

இதனையடுத்து வில் ஸ்மித் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கர் விழாவில் பங்கேற்க கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தின் வெளியே வில் ஸ்மித் வந்தபோது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் இந்தியா வந்ததற்கான காரணம் விரைவில் தெரியவரும். 

முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு வில் ஸ்மித் 'தி பக் லிஸ்ட்' என்ற நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தார். அப்போது சில ஹிந்தி பட நட்சத்திரங்களை அவர் சந்தித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

SCROLL FOR NEXT