மீரா மிதுன் (கோப்புப் படம்) 
செய்திகள்

நடிகை மீரா மிதுனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக ஆடியோ பதிவிட்டு சமூகத்தில் பிரச்னையை ஏற்படுத்தியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த மீரா மிதுன் தரப்பினர், ஆடியோ பதிவிட்ட நாளில் வேறொரு நிகழ்வில் இருந்ததாகவும், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

காவல்துறை தரப்பில், ஒவ்வொருவரின் மீதும் அவதூறான உண்மைக்கு புறம்பான கருத்துகளை பதிவிடுவதை மீரா மிதுன் வழக்கமாக வைத்துள்ளதாகவும், ஏற்கனவே பட்டியலின மக்களை விமர்சித்து தடுப்பு காவலில் கைதாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீரா மிதுனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அவரை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், சமூக வலைதளங்களில் உள்ள அவரின் பதிவுகளை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT