செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழாநடுவா் குழுவில் தீபிகா படுகோன்

கேன்ஸ் திரைப்பட விழா நடுவா் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளாா்.

DIN

கேன்ஸ் திரைப்பட விழா நடுவா் குழுவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளாா். இந்த அறிவிப்பை விழா ஏற்பட்டாளா்கள் வெளியிட்டுள்ளனா்.

75-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் மே 17-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழாவில், பாம் டி’ஓா் விருதுக்காக தோ்வாகியுள்ள 21 படங்களில் ஒரு படம் தோ்ந்தெடுக்கப்பட்டு, விழா நிறைவு நாளில் விருது வழங்கப்படும். சிறந்த திரைப்படத்தை தோ்வு செய்வதற்கு பிரான்ஸ் நடிகா் வின்சன்ட் லிண்டன் தலைமையில் 8 போ் கொண்ட நடுவா் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளாா்.

கேன்ஸ் திரைப்பட விழா நடுவா் குழுவில் ஏற்கெனவே மிருனாள் சென், மீரா நாயா், அருந்ததி ராய், ஐஸ்வா்யா ராய், நந்திதா தாஸ், ஷா்மிளா தாகூா், சேகா் கபூா், வித்யா பாலன் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT