முகப்பு
செய்திகள்

அடுத்த பட அறிவிப்பு வரும் வரை... லோகேஷ் கனராஜ் பகிர்ந்த முக்கிய தகவல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். 

கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றியை பதிவு செய்தது. 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

இந்தப் படம் சுமார் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும்போது மீண்டும் சமூக வலைதளங்களில் இணையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். 
 

முழு கட்டுரையைப் படிக்க →