செய்திகள்

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' - ராஜமௌலி கருத்து

DIN

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து இயக்குநர் ராஜமௌலி கருத்து தெரிவித்துள்ளார். 

கல்கியின் வரலாற்று புதினத்தை திரைப்படமாக இயக்க எம்ஜிஆர், துவங்கி கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் முயற்சி செய்தனர். மணிரத்னம் கூட கடந்த 2010 ஆம் ஆண்டு விஜய், மகேஷ் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் திரைப்படமாக இயக்க திட்டமிட்டார். 

ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. ரஜினிகாந்த் கூட படையப்பாவின் நீலாம்பரி கதாப்பாத்திரத்தை பொன்னியின் செல்வன் நந்தினி கதாப்பாத்திரத்தைக அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியதாக கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருந்தார். 

தற்போது மணிரத்னத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக பொன்னியின் செல்வனை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தின் டீசர், பொன்னி நதி பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. 

இந்த நிலையில் இயக்குநர் ராஜமௌலி சமீபத்தில்  ருசோ பிரதர்ஸ் மற்றும் தனுஷின் 'தி கிரே மேன்' பட நிகழ்வில், இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துவருகிறார்.

நீண்ட நாட்களாகவே பொன்னியின் செல்வனின் கதைய ஓடிடிக்காக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஏனெனில் பொன்னியின் செல்வனை ஒரு திரைப்படமாக எளிதில் சொல்ல முடியாது. 8 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை சொல்லக் கூடிய கதையாக இயக்கலாம். ஓடிடி தான் அதற்கு சரியான தளம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT