சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல நடிகை களமிறங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். மடோன் அஸ்வின் சமீபத்தில் மண்டேலா படத்துக்காக தேசிய விருது பெற்றிருப்பதால் மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். முதல் படமே இன்னும் வெளியாகாத நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி நடிக்கவிருப்பது பலரையும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் இயக்குநர் மிஷ்கின் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சரிதா நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தப் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடைசியாக நடிகை சரிதா கடைசியாக தமிழில் ஜூன் ஆர் படத்தில் நடித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.