செய்திகள்

கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக் - ஜான்வியின் நடிப்பு குறித்து நயன்தாரா கருத்து

கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜான்வி குறித்து நயன்தாரா கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜான்வி குறித்து நயன்தாரா கருத்து தெரிவித்துள்ளார். 

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. நயன்தாராவின் திரையுலக வாழ்வில்  அவர் தனி கதாநாயகியாக நடித்து வெற்றிபெற்ற படங்களில் கோலமாவு கோகிலா படமும் முக்கியமானது. 

இந்தப் படம் ஹிந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் குட் லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. இந்தப் படம் நேரடியாக கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

 இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை ஜான்வி கபூர், சமீபத்தில் குட் லக் ஜெர்ரி படத்தின் டிரெய்லரை நயன்தாரா பார்த்துவிட்டு என் நடிப்பை பாராட்டியதாக கேள்விப்பட்டேன். உடனடியாக நயன்தாராவின் நம்பரை வாங்கி, நீங்கள் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். 

அதற்கு நயன்தாரா அளித்த பதிலில், இந்தப் மாதிரியான கதாப்பாத்திரத்தை நீங்கள் ஏற்று நடிப்பது பெருமையாக இருக்கிறது. கோகிலா எனக்கு இதயத்துக்கு நெருக்கமான கதாப்பாத்திரம்.

குட் லக் ஜெர்ரி பட டிரெய்லர் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. உங்களை விட ஜெர்ரியாக யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது. வாழ்த்துகள் ஜான்வி என பதிலளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

குடியரசுத்தலைவா், ஆளுநருக்கு காலக்கெடு: பாஜக ஆளும் மாநில அரசுகள் எதிா்ப்பு

சிவஞான மாபாடியம் விரிவுரை நூல் வெளியீடு

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருள்கள் சேதம்

இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT