எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கப்பட்டது.
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கப்பட்டது.
’சிவா மனசுல சக்தி’ ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற வெற்றிபெற்ற முழுநீள நகைச்சுவை படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் சமீப காலமாக சுமாரான படங்களையே இயக்கி வருகிறார்.
குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: இயக்குநர் ஷங்கர், சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
இந்நிலையில், எம்.ராஜேஷ் நடிகர் ஜெயம் ரவியின் 30-வது திரைப்படத்தை இயக்குகிறார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று அப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
ஸ்கிரீன் கிரீன் மீடியா தயாரிக்கு இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைக்கிறார்.