செய்திகள்

'இந்தியன்' மீண்டும் வரார்... - காஜல் அகர்வால் வெளியிட்ட தகவல்

இந்தியன் 2 படம் குறித்த முக்கிய தகவலை நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.   

DIN

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நிற்பது அனைவரும் அறிந்ததே. படம் கைவிடப்படுமோ என்று நினைக்கையில் விக்ரம் படத்தின் வெற்றி, தயாரிப்பு தரப்பை மீண்டும் இந்தியன் 2 படத்தைக் கையிலெடுக்க வைத்திருக்கிறது. 

இந்தப் படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தையே பிறந்துவிட்டது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது. 

இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி துவங்கவிருப்பதாகவும், தானும் அந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களிடம் தகவல் பகிர்ந்துள்ளார்.

இந்தியன் 2 படத்தை முடித்துகொடுத்துவிட்டு, ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் தொடர்வார் என்று கூறப்படுகிறது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT