செய்திகள்

வெளியானது விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோவின் டீசர்..

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவின் டீசரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

DIN

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவின் டீசரை நெட்ஃபிளிக்ஸ்  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் ஜூன்  9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து  திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆனால், இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால்  அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில்,  விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவை பியாண்ட் தி ஃபேரி டேல்(beyond the fairy tale) என்கிற பெயரில் நெட்ஃபிளிக்ஸ் விரைவில் வெளியிட உள்ளதால் தற்போது அந்த விடியோவின் டீசரை  வெளியிட்டுள்ளனர்.

ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கியதுடன் திருமண ஏற்பாடுகளையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே நடத்தியது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT