செய்திகள்

என்னைக் கொலை செய்ய முயன்றனர்: நடிகர் சூரி

படப்பிடிப்பின்போது தன்னைக் கொலை செய்ய முயன்றனர் என நடிகர் சூரி நகைச்சுவையாக பேசியுள்ளார்.

DIN

விருமன் படப்பிடிப்பின்போது தன்னைக் கொலை செய்ய முயன்றனர் என நடிகர் சூரி நகைச்சுவையாக பேசியுள்ளார்.

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தி மற்றும் இயக்குநர் முத்தையா இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் முத்தையா, நாயகி அதிதி , சூரி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

அப்போது, மேடையேறி பேசிய நடிகர் சூரி,  ‘படப்பிடிப்பின்போது தண்ணீர் கேனை எப்படி எறிய வேண்டும் என பலரும் என் மீது தூக்கியெறிந்து ரிகர்சல் பார்த்தனர். உண்மையிலேயே எனக்கு வலியெடுத்தது. ஆனால், சமாளித்து நின்றேன். ஒருகட்டத்தில் என்னைக் கொல்லப் பார்த்தார்கள். நல்லவேளை தப்பித்தேன்’ என நகைச்சுவையாக பேசி முடித்தார்.

விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

சரித்திரப் பதிவேடு குற்றவாளி மாநகர எல்லைக்குள் நுழைய ஓராண்டு தடை

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT