செய்திகள்

வணிக வளாகத்தில் நடிகருக்காக கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டம் - வைரலாகும் விடியோ

வணிக வளாகத்தில் பிரபல நடிகரின் திரைப்பட நிகழ்ச்சிக்காக கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

DIN

வணிக வளாகத்தில் பிரபல நடிகரின் திரைப்பட நிகழ்ச்சிக்காக கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

டோவினோ தாமஸ் நடித்துள்ள மலையாள படமான தள்ளுமாலா படம் இன்று(ஆகஸ்ட் 12) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி கொச்சியில் உள்ள வணிகவளாகத்தில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து வணிக வளாகத்தை டோவினோவின் ரசிகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சூழ்ந்தனர். வணிக வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படியொரு கூட்டத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதுதொடர்பாக விடியோ வெளியிட்ட டோவினோ, வணிக வளாகத்தின் நுழைவு வாயிலில் பெரிய கூட்டத்தைப் பார்த்தோம். அப்படியோரு கூட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது நல்லதா கெட்டதா என தெரியவில்லை. எங்களால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. மேடையிலும் ஏராளமான கூட்டம். என் வாழ்நாளில் இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

SCROLL FOR NEXT