செய்திகள்

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' - இரண்டு நாட்களில் இவ்வளவு வசூலா?

திரையரங்குகளில் வெளியான நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

திரையரங்குகளில் வெளியான நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்தப் படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவருவதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்தப் படம் இரண்டு நாட்களில் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாம். படத்துக்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனங்களால் முதல் நாளை விட இரண்டாவது நாள் வசூல் இன்னும் அதிகரித்துள்ளது. 

மேலும் 3 நாட்கள் தொடர் விடுமுறை இந்தப் படத்துக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது. இன்றும் நாளையும் இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநிலங்களவையில் கார்கே - நட்டா இடையே வாக்குவாதம்!

நாடாளுமன்றத்துக்கு மோடி வருவாரா? எம்பிக்களுடன் ராகுல் ஆலோசனை!

மத்திய பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஊழல் தடுப்புச் சட்டம்,1988 - ஒரு பார்வை!!

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT