செய்திகள்

ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு சமூக வலைதளத்தில் வில் ஸ்மித்! 

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு முதன்முறையாக ஆஸ்கார் பிரச்சினை அல்லாத ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். 

DIN

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு முதன்முறையாக ஆஸ்கார் பிரச்சினை அல்லாத ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். 

94வது ஆஸ்கர் விருது விழாவில் பிரபல காமெடியன் கிரிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியின் மொட்டைத் தலையை பற்றி கேலியாக பேசினார். அதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் வில் ஸ்மித் அந்த மேடையிலேயே கிரிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். வில் ஸ்மித் மனைவிக்கு ஒரு நோயின் காரணமாக முடி கொட்டும் பிரச்சினை இருப்பதால் அவருடைய மனது பாதிக்கப்பட்டதால் கோபத்தில் அடித்தேன் என கிரிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். சிறந்த நடிகருக்கான  ஆஸ்கர் விருதைப் பெற்ற முதன்முறையாக பெற்றார் வில் ஸ்மித். பின்னர் ஆஸ்கார் கமிட்டி அவரை 10 ஆண்டுகள் ஆஸ்கர் குழுவிலிருந்து நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. 

வில் ஸ்மித் ஆஸ்கர் பிரச்சினை அல்லாத ஒரு பதிவினை முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். அதில் சிறிய குரங்கு ஒன்று பெரிய குரங்கிடம் வம்பிழுப்பது போன்ற நகைச்சுவை விடியோவை பதிவிட்டு, “மீண்டும் சமூக வலைதளத்தில் திரும்ப முயற்சிக்கிறேன்” என பதிவிட்டு இருந்தார். 

இந்த பதிவிற்கு வில் ஸ்மித்தின் முன்னாள் மனைவி ஹார்டின் எமோஜியை பதிவிட்டு உள்ளார். நேஷ்னல் ஜியாகிராபி ஆளுமை சீசர் மிலன், “விலங்குகள் உலகம் உங்களுடன் இருக்கிறது வில்” என கமெண்ட் செய்திருந்தார். அவரது ரசிகர்களும் அவரது வருகைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT