செய்திகள்

ரஜினிகாந்த் - நெல்சனின் 'ஜெயிலர்' பட முதல் பார்வை போஸ்டர்  - முக்கிய அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

DIN

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஜெயிலர் பட முதல் பார்வையை வெளியிட்டு படப்பிடிப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 22) துவங்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கண்ணாடி அணிந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார். 

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும் எதுவும் முறையாக அறிவிக்கப்படவில்லை. 

சமீபத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. மேலும் தரமணி, ராக்கி படங்களில் மிரட்டிய வசந்த் ரவி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. முறையாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT