செய்திகள்

ரஜினியின் 'ஜெயிலர்' அனல் பறக்கப்போவது உறுதி - புதிதாக இணைந்த பிரபலம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் பட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் பட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 22) சென்னையில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இதனை முன்னி்ட்டு படத்தில் ரஜினியின் தோற்றத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

இந்த நிலையில் ஜெயிலர் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. முதலில் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள்  படமாக்கப்பட்டுவருகின்றனவாம்.  ஸ்டண்ட் சிவா தான் சண்டைப்பயிற்சி இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். கூடவே அவரது மகன்கள் கெவின் மற்றும் ஸ்டீவனும் இந்தப் படத்தில் பணிபுரிகின்றனர். 

தெலுங்கு படமான பாலகிருஷ்ணாவின் அகாண்டா திரைப்படத்தில் இந்த தந்தை மகன் கூட்டணி வடிவமைப்பு செய்த சண்டைக்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஜெயிலர் பட சண்டைக்காட்சி அனல் பறக்கும் அளவுக்கு இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT