செய்திகள்

லால் சிங் சத்தாவைத் தொடர்ந்து சர்ச்சையில் ‘லைகர்’

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘லைகர்’ திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் டிவிட்டர் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

DIN

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘லைகர்’ திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் டிவிட்டர் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ’லைகர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்க, பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள லைகர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வருகிற 25 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா இருக்கையில் அமர்ந்தபடி மேஜையின் மீது கால்களை விரித்து கேள்விகளுக்கு பதிலளித்தார். தற்போது,  இந்த நிகழ்வைப் டிவிட்டரில் பகிர்ந்து பல பாலிவுட் ரசிகர்கள் ‘பாய்காட் லைகர்’(boycot liger) என அப்படத்தை  புறக்கணிக்கத் துவங்கியுள்ளனர். 

ஆனால், இதுகுறித்து பேசிய விஜய் தேவரகொண்டா ‘இப்படத்திற்காக 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறோம். உண்மையான திறமைசாளிகள் பக்கம் கடவுள் இருப்பார்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, லால் சிங் சத்தா திரைப்படமும் டிவிட்டரில்  புறக்கணிப்பைச் சந்தித்து மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணி அதிரடியாக விளையாட இவர்கள் இருவரும்தான் காரணம்: அஸ்வின்

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT