செய்திகள்

''கபாலி'யால் மன உளைச்சலில் இருந்தேன்....'' - இயக்குநர் பா.ரஞ்சித் தகவல்

கபாலி படத்தால் மன உளைச்சலில் இருந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

DIN

கபாலி படத்தால் மன உளைச்சலில் இருந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை இயக்கியுள்ளார். தென்மா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் நேற்று (ஆகஸ்ட் 22) வெளியானது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சசி, வெங்கட் பிரபு தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

விழாவில் பேசிய பா.ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு பற்றி குறிப்பிடும்போது, கபாலி படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற்றது. தயாரிப்பாளர் தாணு எனக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல் நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால் அந்தப் படம் வெளியாகும்போது திரையுலகில் எதிர்மறை விமர்சனங்களே இருந்தது. அதன் காரணமாக நான் மன உளைச்சலில் இருந்தேன். 

அப்போது கபாலி படத்துக்கு கிடைத்த வசூல் விவரங்களை எனக்கு தாணு காட்டி, 'உன் படம் பெரிய ஹிட்டு' என நம்பிக்கை கொடுத்தார். அதனை என்னால் என்றும் மறக்கமுடியாது என்று தெரிவித்தார். 

நட்சத்திரம் நகர்கிறது படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. காதல் குறித்து விவாதங்களை இந்த சமூகத்தில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT