செய்திகள்

தமிழ் பிக்பாஸ் 6-ல் இரண்டு கிளாமர் நடிகைகள் - வெளியான தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இரண்டு பிரபல நடிகைகள் பங்கேற்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

DIN

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இரண்டு பிரபல நடிகைகள் பங்கேற்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

விஜய் டிவியில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது. இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 6 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

இந்த சீசனில் ரக்சன், பாடகி ராஜலட்சுமி, நடிகர் கார்த்திக் குமார், தொகுப்பாளினி டிடி, நடிகை ஸ்ரீநிதி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஷில்பா மஞ்சுநாத் காளி மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் நடித்திருந்தார். 

சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி சொத்துகள் முடக்கம்!

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT