செய்திகள்

சுந்தர்.சி - யுவனின் 'காஃபி வித் காதல்' பட நாளைய பொழுது பாடல் இதோ

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சுந்தர்.சி கூட்டணியின் காஃபி வித் காதல் பட நாளைய பொழுது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

DIN

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சுந்தர்.சி கூட்டணியின் காஃபி வித் காதல் பட நாளைய பொழுது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

சுந்தர்.சி தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் காஃபி வித் காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு சுந்தர்.சி - யுவன் கூட்டணி கைகோர்த்துள்ளது. 

இந்தப் படத்தில் சம்யுக்தா, அம்ரிதா, மாளவிகா சர்மா, யோகி பாபு, திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே ரம்பம்பம், தியாகி பாய்ஸ் போன்ற பாடல்கள் வெளியான நிலையில் தற்போது நாளைய பொழுது என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

பா.விஜய் எழுதியுள்ள இந்தப் பாடலை யுவன் பாடியுள்ளார். காஃபி வித் காதல் திரைப்படம் சுந்தர்.சியின் முந்தைய படங்களான உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு போல நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT