நடிகர் அஜித்குமாரிடம் பிடித்த விஷயங்கள் குறித்து ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் பகிர்ந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரன்பீர் கபூர் - ஆலியா இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா (தமிழில் பிரம்மாஸ்திரம்) வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. புராண கதைகளை அடிப்படையாகக் கொண்டு மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராஜமௌலி வெளியிடுகிறார்.
மேலும் அமிதாப் பச்சன் மற்றும் நாகர்ஜுனா இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாஸ்திரா படத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ரன்பீர், இயக்குநர் ராஜமௌலி, நாகர்ஜுனா உள்ளிட்டோர் சென்னை வந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
வழக்கமாக பிற மொழி திரை பிரபலங்களிடம் கேட்பது போல அஜித் பற்றி சொல்லுங்கள், விஜய் பற்றி சொல்லுங்கள் என ரன்பீரிடம் தொகுப்பாளர் கேட்டார். அஜித் குறித்து பதிலளித்த ரன்பீர், அவர் சிறந்த மனிதர். அவரை திரைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும். மற்ற படி அவரது புகைப்படங்களைக் கூட பார்க்க முடிவதில்லை. விமான நிலைய புகைப்படங்கள் கூட நமக்கு கிடைப்பதில்லை.
நிறைய நடிகர்கள் அப்படி இல்லை. இப்போதிருக்கும் சமூக வலைதள யுகத்தில் அவர் இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி அவரிடம் இந்த விஷயங்கள் எனக்கு பிடித்திருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.