செய்திகள்

படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறியா? - இயக்குநர் மிஷ்கின் விளக்கம்

தன் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என மிஷ்கின் பேசியதாக வெளியான செய்திக்கு மிஷ்கின் விளக்கமளித்துள்ளார். 

DIN

தன் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என மிஷ்கின் பேசியதாக வெளியான செய்திக்கு மிஷ்கின் விளக்கமளித்துள்ளார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் மிகஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்ததாகவும், குழந்தைகளும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதால் அந்த காட்சிகளை நீக்கி விட்டதாகவும் மிஷ்கின் தெரிவித்திருந்தார். 

இந்த பரபரப்பு அடங்கும் முன்னே தனது படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என மிஷ்கின் பேசியதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. 

இந்த நிலையில் இயக்குநர் மிஷ்கின் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என நான் பேசியதாக ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்தேன் . வருத்தமாக இருந்தது. தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமேன நான் சொன்னதை மாற்றியிருக்கிறார்கள். நான் பேசியதன் அர்த்தம் வேறு. 

யார் வேண்டுமானாலும் என் படத்தைப் பார்த்து பாராட்டவோ, விமர்சிக்கவோ செய்யலாம். இது அனைவரின் உரிமை என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT