செய்திகள்

''தாய் கிழவினு சொல்லாதீங்க'' - நித்யா மேனன் வேண்டுகோள்

தாய் கிழவி என்று என்னை அழைக்க வேண்டாம் என நடிகை நதியா மேனன் ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.  

DIN

தாய் கிழவி என்று என்னை அழைக்க வேண்டாம் என நடிகை நதியா மேனன் ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து கடந்த 18 ஆம் தேதி வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் படத்தில் ஷோபனா என்ற வேடத்தில் நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய தாய் கிழவி என்ற பாடல் மிக பிரபலமாகியுள்ளது. 

இதனையடுத்து சமூக வலைதளங்களில் நித்யா மேனனை தாய் கிழவி என ரசிகர்கள் குறிப்பிட்டுவருகின்றனர். இந்த நிலையில் நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது தன்னை யாரும் தாய் கிழவி என்று அழைக்க வேண்டாம் எனவும் தனக்கு அதில் ஆர்வம் இல்லை எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.  

திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியுள்ளார். யாரடி நீ மோகனி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு 4வது முறையாக தனுஷ் - மித்ரன் ஜவகர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

தனுஷ், நித்யா மேனனைத் தொடர்ந்து பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்துவருகிறது. திருச்சிற்றம்பலம் படம் 4 நாட்கள் விடுமுறையில் வெளியானது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு விமர்சன ரீதியிலான வெற்றிப் படமாக திருச்சிற்றம்பலம் அமைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT