செய்திகள்

'திருச்சிற்றம்பலம்' வசூல் எவ்வளவு?

திரையரங்குகளில் வெளியான நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

திரையரங்குகளில் வெளியான நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தாத்தா, அப்பா, மகன் என தலைமுறைகளின் உறவுகளையும் காதலையும் மையப்படுத்திய உருவாக்கப்பட்ட ‘திருச்சிற்றம்பலம்’ தமிழகத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

முதலில் இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.20 கோடி வசூலித்தாகவும், தற்போது ஒரு வாரத்தில் ரூ.50 கோடி வசூலைத் தாண்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வருகிற ஆக - 31 ஆம் தேதி கோப்ரா, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதால் இன்னும் 1 வாரத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ திரையரங்குகளில் வசூலைக் குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

“கரூரில் நடந்த நாடகங்கள்! கண்டிப்பாக தவெக பிரசாரம் தொடரும்!” தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார்

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: 2 மாதங்களுக்கு நீட்டிப்பு!

ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுடன் இணையும் பிரபல தென்கொரிய நடிகர்!

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT