செய்திகள்

''இனி ஆண்ட்டி என அழைத்தால்...'' - ரசிகர்களை எச்சரித்த 'புஷ்பா' நடிகை

பிரபல நடிகை ஒருவர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். 

DIN

பிரபல நடிகை ஒருவர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். 

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியும், பிரபல நடிகையுமான அனுசுயா 'ரங்கஸ்தலம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். 

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' படம் தொடர்பாக எதிர்மறை விமர்சனத்தை அனுசுயா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அவரைத் திட்டி பதிவிட்டனர். 

ஒரு சிலர் ரசிகர்கள் அவரது வயதைக் காரணம் காட்டி ஆண்ட்டி என அழைத்தனர். இதனயைடுத்து ''தனக்கு 37 வயதுதான் ஆகிறது, என்னை அப்படி அழைக்காதீர்கள்'' என அனுசுயா பதிவிட, தொடர்ச்சியாக ரசிகர்கள் அவரை ஆண்டி என்றே அழைத்தனர். 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, ''இது பெண்களை துன்புறுத்தவதற்கு சமம், தொடர்ந்து என்னை அப்படி அழைத்தால் அதனை ஸ்கீரின்ஷாட் எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன். இது என் கடைசி எச்சரிக்கை'' என்று அனுசுயா பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறான அணுகுமுறையால் கோவை மெட்ரோ பணியில் தாமதம்: இபிஎஸ்

சென்னையில் ரூ. 89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள் திறப்பு!

ஜன நாயகன் இசை வெளியீட்டுத் தேதி!

முதல்வர் பதவி விவகாரம்! கர்நாடக எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT