செய்திகள்

'நட்சத்திரம் நகர்கிறது' படம் பார்த்து ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய ஹிந்தி இயக்குநர்

நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். 

DIN

நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதன்முறையாக இசையமைப்பாளர் தென்மாவுடன் பா.ரஞ்சித் கைகோர்த்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. 

காதலின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து பேசும் இந்தப் படத்தின் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் மும்பையில் திரையிடப்பட்டது. 

அப்போது ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை நந்திதா தாஸ் உள்ளிட்டோர் படம் பார்த்தனர். இந்த நிலையில் படம் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு நட்சத்திரம் நகர்கிறது படம் மிகவும் பிடித்துவிட்டதாம். இதனையடுத்து அவர் இயக்குநர் பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். 

அனுராக் காஷ்யப் எப்பொழுதும் நல்ல தமிழ் படங்களை பாராட்டத் தவறுவதில்லை. அவரது 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்துக்கு சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்' படம் முன்மாதிரியாக இருந்ததாக அவர் பல தருணங்களில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு

மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT