செய்திகள்

தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டி கௌரவம் அளித்த கனடா - ரஹ்மான் உருக்கமான பதிவு

கனடா நாட்டு தெருவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

DIN

கனடா நாட்டு தெருவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

பொதுவாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தெருக்கள் ஆகியவற்றுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பிற நாட்டு பிரபலங்களின் பெயர்களை சூட்டுவது அரிதான ஒன்று.

இந்த நிலையில் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவுக்கு சூட்டியிருக்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த மேயர் ஒருவர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கனடா நாட்டில் உள்ள மார்கம் என்ற நகரில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டியுள்ளதாக அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் ''என் வாழ்க்கையில் இதனை நான் கற்பனை கூட செய்தததில்லை. 

இதற்காக மார்கம் மேயர், கனடாவின் இந்திய தூதர் மற்றும் கனடா நாட்டு மக்கள் ஆகியோருக்கு நான் எப்பொழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். 

ஏ.ஆர்.ரஹ்மான் எனது பெயரில்லை. அதன் அர்த்தம் இரக்கம். இரக்கம் என்பது நம் எல்லோருக்கும் பொதுவான கடவுளின் குணம். இந்தப் பெயர் கனடா மக்களுக்கு அமைதி, வளம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் அகியவற்றை வழங்கும். 

இந்தியாவில் உள்ள சகோதர சகோதரிகள் எனக்கு அளித்த அன்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  100 ஆண்டு இந்திய சினிமாவைக் கொண்டாடுகின்ற,  எனக்கு உத்வேகம் அளிக்கின்ற, என்னுடன் பணிபுரிந்த கலைஞர்களுக்கு நன்றி. நான் கடலில் சிறிய துளி போன்றவன். 

இது எனக்கு மேலும் பணிபுரிய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. இதன் காரணமாக எனக்கு சோர்வு ஏற்பட்டாலும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும், நிறைய மக்களை ஈர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வேன். எல்லா புகழும் இறைவனுக்கே'' என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

காரில் புகையிலைப் பொருள் கடத்தல்: இளைஞா் கைது

இளைஞரிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

SCROLL FOR NEXT