செய்திகள்

'விக்ரம்' பட முழு வசூல் விவரம் - கமலுக்கு இத்தனை கோடி லாபமா?

கமல்ஹாசனின் விக்ரம் பட முழு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

DIN

கமல்ஹாசனின் விக்ரம் பட முழு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. ஓடிடியில் வெளியானாலும் இன்னும் சில திரையரங்குகளில் விக்ரம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. ஹிந்தியில் இந்தப் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் துல்லியமான வசூல் விவரம் கிடைத்துள்ளது. அதன் படி இந்தப் படம் தமிழகத்தில் ரூ.181.5 கோடியும் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ரூ.42 கோடியும் கர்நாடகத்தில் ரூ.25 கோடியும், கேரளத்தில் ரூ. 40.5 கோடியும் வட இந்தியாவில் ரூ.17.25 கோடியும் வெளிநாடுகளில் இந்தப் படம் ரூ.125 கோடியும் வசூலித்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ரூ.432 கோடி வசூலித்துள்ளதாம். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.195.5 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. அதிக வசூலித்த தமிழ் படங்களின் வரிசையில் ரஜினிகாந்த்தின் 2.0 படத்துக்கு அடுத்த இடத்தில் விக்ரம் இருக்கிறது.  

இதே போல சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரூ.62 கோடியும், விஜய்யின் பீஸ்ட் ரூ.237 கோடியும், அஜித் குமாரின் வலிமை ரூ.152 கோடியும், சிவகார்த்திகேயனின் டான் ரூ.122.5 கோடியும், தனுஷின் திருச்சிற்றம்பலம் இதுவரை ரூ. 52 கோடியும் வசூலித்துள்ளதாக தககவல் கிடைத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானவில்லின் அழகு - பிரீத்தி முகுந்தன்

மேகம் போல கலையும் உடல்

2-வது டெஸ்ட்: ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மே.இ.தீவுகள் வீரர்கள்!

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது: மமதா சர்ச்சைப் பேச்சு!

கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகளின் கதி?

SCROLL FOR NEXT