கிறிஸ் ராக் தாக்குதலின்போது 
செய்திகள்

மீண்டும் ஆஸ்கர் தொகுப்பாளர் வாய்ப்பு: கிறிஸ் ராக் நிராகரிப்பு

ஆஸ்கர் விருது விழாவில் தாக்கப்பட்ட கிரிஸ் ராக் தொகுப்பாளர் வாய்ப்பை மறுத்துள்ளார்.

DIN

ஆஸ்கர் விருது விழாவில் தாக்கப்பட்ட கிறிஸ் ராக் தொகுப்பாளர் வாய்ப்பை மறுத்துள்ளார்.

இந்தாண்டு நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது விழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியின் முடியில்லா தலையை பற்றி கேலியாக பேசினார்.

இதனைக் கேட்ட பார்வையாளர்கள் சிரித்தனர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வில் ஸ்மித் அந்த மேடையிலேயே கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார்.

இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையானது. பின்னர், நோயின் காரணமாக மனைவிக்கு முடி கொட்டும் பிரச்னையால் அவருடைய மனது பாதிக்கப்பட்டது. அதனால் கோபத்தில் அடித்தேன் என  வில் ஸ்மித் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஆனால், முதன்முறையாக  சிறந்த நடிகருக்கான  ஆஸ்கர் விருதைப்  பெற்ற வில் ஸ்மிதை  ஆஸ்கர் கமிட்டி 10 ஆண்டுகள் ஆஸ்கர் குழுவிலிருந்து நீக்கியது.

இந்நிலையில், இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கிரிஸ் ராக்கிற்கு ஆஸ்கர் குழு 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருது நிகழ்வில் மீண்டும் தொகுப்பாளாரக பணியாற்ற வாய்ப்பு வழங்கியது. ஆனால், கிறிஸ் ராக் அதனை நிராகரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் 80 கி.மீ. வேகத்தில் சென்றால் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல் ஒலிக்கும்! எங்கு தெரியுமா?

தள்ளிப்போகும் நானியின் தி பாரடைஸ் பட வெளியீடு!

நமீபியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்!

நேபாளத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தாலி அபார வெற்றி!

SCROLL FOR NEXT