செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' -  முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! 

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வெற்றிபெற்ற ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனுதீப்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார். 

தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சுரேஷ் புரொடக்சன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரித்துவருகின்றன.மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT