வாரிசு திரைப்பட 2ஆவது பாடல் வெளியீடு எப்போது? படக்குழு அறிவிப்பு
வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Advertisement
இதையும் படிக்க | கலகலப்பால் திணறடிக்கும் கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்
அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.
ஏற்கெனவே முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் வெளியாகி 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் இரண்டாவது பாடல் அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.