செய்திகள்

நாளை வெளியாகிறது பகாசூரன் டிரைலர்

பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் படத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.

படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சான்ஸ் எஸ் எஸ் இசையமைத்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படம் விரைவிலேயே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

SCROLL FOR NEXT