செய்திகள்

ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட ‘ரத்தசாட்சி’ படத்தின் டிரைலர்! 

ஜெயமோகனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘ரத்தசாட்சி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

DIN

ஜெயமோகனின் கதையை மையமாக வைத்து ‘ரத்தசாட்சி’ எனும் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் ஆகியவை தங்களின் வரவிருக்கும் படத்தின் தலைப்பை "ரத்தசாட்சி"  என நவம்பர் 7ஆம் தேதி அறிவித்தது. ‘பொன்னியின் செல்வன்’ ,  ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற திரைப்படங்களின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்று  ‘கைதிகள்’. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே இந்தப்படம். 

இப்படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

திருமதி அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளது. தற்போது படத்தின் டிரைலரை நடிகர் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவா் குடியிருப்பில் அமலாக்கத்துறை சோதனை

மரக்கடையில் தீ விபத்து : வாகனங்கள் சேதம்

சைக்கிள்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கலை இலக்கிய பெருமன்ற சமத்துவப் பொங்கல் விழா

தாத்தா சாமி மஹாமடத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பு கோ பூஜை

SCROLL FOR NEXT