செய்திகள்

டிச. 9-ல் 'துணிவு' படத்தின் முதல் பாடல் ரிலீஸ்

அனிருத் பாடிய துணிவு படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

DIN


துணிவு படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பாடல் அஜித் குமாரின் அறிமுக பாடலாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜிப்ரான் இசையில் ''சில்லா.. சில்லா..'' எனத் தொடங்கும் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ளனர். 

வலிமை படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு படத்திற்காக இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. 

திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

இதனிடையே அஜித் ரசிகர்கள் மீண்டும் மகிழ்ச்சியடையும் வகையில், டிசம்பர் 9ஆம் தேதி அஜித்குமாரின் அறிமுக பாடல் வெளியாகிறது. இதனை போனி கபூர் தனது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT