செய்திகள்

சந்திரமுகி 2 படத்தில் இணைந்த நடிகை கங்கனா ரணாவத்

சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகை கங்கனா ரணாவத் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

DIN

சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகை கங்கனா ரணாவத் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குகிறார். சந்திரமுகி-1 திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி.  மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தமிழில் தாம்தூம் திரைப்படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 4.12.25

இஸ்ரேல் உங்களைப் பாதுகாக்காது.. காஸாவில் ஹமாஸ் எதிரிப் படையின் தலைவர் கொலை!

சூரிய ஒளியைப் பிடித்து... ஷில்பா ஷெட்டி!

மரகதப் புறா... சாக்‌ஷி மாலிக்!

SCROLL FOR NEXT