செய்திகள்

ரஜினிக்கு தனுஷ் சொன்ன ஒரு வரி பிறந்தநாள் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி நடிகர் தனுஷ் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி நடிகர் தனுஷ் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி தனது 72-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இன்று காலை முதலே ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்குகளில் புதுப்பொழிவுடன் பாபா மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலிருந்து முத்துவேல் பாண்டியன் என்ற பாடலும் இன்று மாலை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா’ என்று ஒரே வரியில் தனது வாழ்த்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனுஷ் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT