செய்திகள்

நடிகர் விஜய் பாணியில் இசையமைப்பாளர் தமனின் வைரல் ட்விட்!   

வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமனின் ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது. 

DIN

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ராதிகா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ரஞ்சிதமே பாடல் 90 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பாடலும் சிம்பு குரலில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தின் 3வது பாடலுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் தமனின் ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “நண்பா வாரிசு ஆல்பம்” என பதிவிட்டு தீ, இசைக்கருவிகள் எமோஜிகளை பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் வாரிசு ஆல்பத்தினை கேட்டு தீ மாதிரி இருக்கு நண்பா என்று கூறியதால்தான் தமன் இப்படி ட்விட் போட்டிருப்பாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா எப்போது என கேட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தினகரன்

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

பூம்புகாா் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

‘பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்’

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

SCROLL FOR NEXT